நெல்லை தாழையூத்து பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு
நெல்லை தாழையூத்து பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை:
கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ஊரடங்கின்போது மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை கண்காணிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் போலீசாருக்கு டிரோன் கேமரா வழங்கினார்.
இதையடுத்து நெல்லை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா மற்றும் போலீசார் தாழையூத்து பகுதிகளில் நேற்று டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பஜார், ஆற்றுப் பகுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
Related Tags :
Next Story