ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த கோரி சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த கோரி சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த கோரியும், கொரோனா நோயாளிகளின் உயிர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க கோரியும், நோயாளிகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை சுகாதாரத்துடன் தூய்மையாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கொரோனா முழு ஊரடங்கு இருப்பதால் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது எனக்கூறி வாலிபர் சங்கத்தினரை எச்சரிக்கை செய்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story