10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 14 May 2021 5:50 AM IST (Updated: 14 May 2021 5:52 AM IST)
t-max-icont-min-icon

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

ஊட்டி,

மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த அணை கரையோரத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனி அறை உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த அறை அருகே மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மலைப்பாம்பை பிடித்தனர். அந்த மலைப்பாம்பு 10 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட மலைப்பாம்பை கெத்தை வனப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story