நாகையில் பலத்த மழை


நாகையில் பலத்த மழை
x
தினத்தந்தி 14 May 2021 9:41 PM IST (Updated: 14 May 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் பலத்த மழை பெய்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நாகப்பட்டினம்:
நாகையில் பலத்த மழை பெய்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயில்
நாகை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கிய நாளில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. இதனால்மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாத நிலையில் உள்ளது.
நாகையில் கடந்த 12-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கீழ்வேளூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் நாகையில் வெயில் அடித்து வந்தது.
பலத்த மழை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. இதை தொடர்ந்து 11 மணி அளவில் மழை பலத்த பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது.  இதனால் சாலையில்  மழை வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடியது.மேலும் தாழ்வான பகுதியில் குளம் மழைநீ்ர் தேங்கி நின்றது.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியாக காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை முதலே நாகையில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது.
திருமருகல்
திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், ஏனங்குடி, புத்தகரம், கொட்டாரக்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.பின்னர் நள்ளிரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்திற்கு நீடித்தது.  
இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையால் குளிர்ந்த நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இந்த மழை சம்பா பயிர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story