வீடுகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


வீடுகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 14 May 2021 5:30 PM GMT (Updated: 14 May 2021 5:30 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் வீடுகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் வீடுகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

ரம்ஜான் பண்டிகை 

ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்கள், திறந்த வெளி மைதானங்களில் தொழுகை நடத்தப்படும். 

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால், வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். 

சில இடங்களில் வீட்டின் மொட்டை மாடிகளில் தொழுகை நடத்தப்பட்டது. 

வாழ்த்து தெரிவித்தனர் 

இதில் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் தொழுகை செய்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் களை தெரிவித்தனர். 

அதுபோன்று தங்கள் செல்போன்கள் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை அனுப்பி பரிமாறிக்கொண்டனர். 

அதுபோன்று ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை  கொண்டாடப்பட்டது. அத்துடன் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். 

விரைவில் குணமடைய தொழுகை 

வால்பாறை பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் எளிய முறையில் தங்களது வீடுகளிலேயே குடும்பத்தினருடன் ரம்ஜான் தொழுகை நடத்தி கொண்டாடினார்கள். 

கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடுதிரும்பு வதற்காகவும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்கவும் தொழுகையில் வேண்டி கொண்டதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர். 


Next Story