பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் தெரிவித்தார்.
ஆய்வு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் ஆய்வு செய்தார்.
மேலும் பணிகள் முடிந்த புதிய கட்டிடத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட உள்ளது. இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள படுக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
ஆஸ்பத்திரிக்கு என்னனென்ன தேவைகள் உள்ளது, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் கூறியதாவது:-
ஆக்சிஜன் படுக்கை வசதி
கொரோனா 2-வது அலையின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக ஆக்ஜிசன் தேவையும் அதிகரித்து உள்ளது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 160 படுக்கைகள் கொரோனா சிகிச்சை அளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதிப்பு குறைந்ததால் 100 படுக்கைகளாக குறைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளதால், படுக்கை வசதி போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக புதிய கட்டிடத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் உள்ளன.
புதிய கட்டிடத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படுகிறது. வருகிற 18-ந்தேதி முதல் இந்த வார்டு செயல்பாட்டுக்கு வரும். மேலும் கூடுதலாக 50 சாதாரண படுக்கைகளும் அமைக்கப்படுகின்றன.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி
மாவட்ட அளவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை நியமிப்பது குறித்த முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தனியாக செவிலியர் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்கப்படும். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story