தூக்குப்போட்டு பெண் போலீஸ் தற்கொலை

தஞ்சை ஆயுதப்படையில் பணிபுரிந்த பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சை ஆயுதப்படையில் பணிபுரிந்த பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் போலீஸ்
தஞ்சை ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பிரியா(வயது 23). கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த இவர், தனது கணவர் வினோத்குமார் மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் தமிழ்ப்பல்கலைக்கழகம் எதிரே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
பிரியாவுக்கும், வினோத்குமாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் குழந்தையுடன் வினோத்குமார் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்குச் சென்று விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதுதொடர்பாக நேற்று பிற்பகல் வினோத்குமாரை செல்போனில் பிரியா தொடர்பு கொண்டார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா மின் விசிறிக்கான கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் தற்கொலை செய்துகொண்ட பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story