கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை

தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தா.பழூர்:
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில் அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு அதிகம் இல்லாத நபர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வார்டு பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு புறநோயாளிகள் அந்தப் பகுதிக்கு செல்லாதபடி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவில் நோய் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story