வாணியம்பாடி அருகே ஒற்றை கொம்பு காட்டுயானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

வாணியம்பாடி அருகே ஒற்றை கொம்பு காட்டுயானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
வாணியம்பாடி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் வன விலங்குகள் காட்டுப்பகுதியை விட்டு தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. வாணியம்பாடி அருகே ஜவ்வாதுமலை-காவலூர் வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்களுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒற்றை கொம்பு காட்டு யானை ஒன்று தண்ணீர் தேடி வந்தது.
அந்தக் காட்டு யானை காவலூர், கிருஷ்ணாபுரம், சத்திரம் ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அங்குள்ள கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டது. காட்டு யானை நடமாட்டத்தை அறிந்த கிராம பொதுமக்கள் ஊருக்குள் காட்டு யானை நுழையாமல் தடுக்க விடிய விடிய பட்டாசுகளை வெடித்து வனப்பகுதியை நோக்கி விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை தொட்டிகள் கட்டி நிரப்ப வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story