கம்பம் பகுதியில் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிப்பு

கம்பம் பகுதியில் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிக்கப்படுகிறது.
கம்பம்:
கம்பத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. .இந்நிலையில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் கொரோனா பாதுகாப்பு கவச உடைக்கான தேவை அதிகரித்திருப்பதால், திருப்பூர், கரூர் ஆடை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பிற்கு மாறியுள்ளனர். அதேசமயம் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் கொரோனா 2-வது அலை ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதனால் பாதுகாப்பு கவச உடை தயாரிக்க போதுமான அளவில் பணியாளர்கள் கிடைக்க வில்லை.
இதைத்தொடர்ந்து கம்பத்தில் உள்ள ரெடிமேடு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிக்கும் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அதன்படி ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிக்கும் பணியில் தையல் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தையல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story