சேலத்தில் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது-சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்


சேலத்தில் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது-சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 May 2021 2:58 AM IST (Updated: 23 May 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

சேலம்:
சேலத்தில் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
நடமாடும் வாகனங்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கூடுவதை தடுக்க மாநகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கூட்டம் அலைமோதியது
இந்த நிலையில் நேற்று காலை சேலம் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள ஆற்றோர காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் பலர் காய்கறிகளை விற்பனை செய்தனர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று கொண்டு காய்கறிகளை வாங்கினர். 
இதன் மூலம் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே நேற்று மாலையிலும் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story