குடியாத்தம் அருகே 2 சினை பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்கள்


குடியாத்தம் அருகே  2 சினை பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்கள்
x
தினத்தந்தி 23 May 2021 10:48 PM IST (Updated: 23 May 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே 2 சினை படுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

குடியாத்தம்-

2 மாடுகள் திருட்டு

குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர்பட்டியை சேர்ந்தவர் அரி. விவசாயி. இவர் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வந்தார். இரண்டு பசு மாடுகளும் 6 மாதம், 7 மாதம் என சினையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியிருந்த 2 மாடுகளையும் காணவில்லை. 

அதைத்தொடர்ந்து மாடுகளை தேடி உள்ளார்.  அப்போது மழை பெய்த ஈரம் இருந்ததால் மாட்டின் கால் தடம் இருந்தது. அதனை பின்தொடர்ந்து சென்றபோது அருகே உள்ள காயிதே மில்லத் நகர் வரை கால் தடம் இருந்தது. அந்த இடத்தில் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதாகக் கூறப்படுகிறது. அதில் இருந்து சற்று தொலைவில் அரியின் மாடுகளை கட்டியிருந்த கயிறு, மாடுகளின் கால்கள், தலை உள்ளிட்டவை இருந்துள்ளது.

பொதுமக்கள் சாலை மிறியல்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அரி மற்றும் அவரது உறவினர்கள் கிராம மக்கள் இறைச்சிக்காக கொல்லப்பட்ட பசு மாடுகளின் தலை மற்றும் கால்கள் உள்ளிட்டவைகளை சித்தூர் கேட் பகுதியில் சித்தூர் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், சிவச்சந்திரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. 

வாலிபர் கைது

ஒரு வாரம் ஊரடங்கு காரணமாக நேற்று பொருட்கள் வாங்க ஏராளமானோர் குடியாத்தம் நகருக்கு வாகனங்களில் வந்தனர். சாலை மறியலால் வாகனங்கள் செல்லமுடியாமல் நெரிசல் ஏற்பட்டது. 

தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீசில் அரி புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

அதில் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த ஷெரிப் என்பவரின் மகன் முபாரக் அலி (வயது 28) என்பவர் பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டியதும், இவருடன் இவரது அண்ணனும் சித்தூர் கேட் பகுதியில் இறைச்சி கடை வைத்திருக்கும் ரபீக் (36) என்பவரும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதனையடுத்து போலீசார் முபாரக் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரபீக்கை தேடி வருகின்றனர்.

Next Story