ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 9 பேர் பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 9 பேர் பலியாகினர்.
669 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 31,105 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 25,218 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,553 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நோய் பாதிப்புக்கு நேற்று 9 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 335-ஆக உயர்ந்துள்ளது.
படுக்கைகள்
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 952 படுக்கைகள் உள்ள நிலையில் 859 படுக்கைகளில் நோய்பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 64 படுக்கைகள் காலியாக உள்ளன.
சிகிச்சை மையங்களில் 1,621 படுக்கைகள் உள்ள நிலையில் 771 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 850 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு
விருதுநகர் ஆர்.சி. நகர், சிவானந்த நகர், என்.ஜி.ஓ. காலனி, பாண்டியன் நகர், ராஜாஜி நகர், காந்திநகர், அல்லம்பட்டி, குருசாமி கொத்தன் தெரு, பட்டம்புதூர், சூலக்கரை, வடமலைக்குறிச்சி, அண்ணாமலை தெரு, ஏ.ஏ. ரோடு, பேராளி ரோடு, லட்சுமி நகர், அரசு ஆஸ்பத்திரி, கருப்பசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அருப்புக்கோட்டை, திருநகரம், கோவிலாங்குளம், வெம்பக்கோட்டை, மேல கோதை நாச்சியார்புரம், புள்ளக்கவுண்டன்பட்டி, வன்னியம்பட்டி, காரியாபட்டி, பெரிய ஓடைப்பட்டி, உப்பத்தூர், சின்னகாமன்பட்டி, சிதம்பரம் நகர், ஆலமரத்துப்பட்டி, பள்ளப்பட்டி, எம்.ரெட்டியப்பட்டி, முஸ்டக்குறிச்சி, வீரசோழன், வேடநத்தம், நத்தம்பட்டி, குன்னூர், ஆர்.ரெட்டியப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story