மேலும் 703 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 31,811 ஆக உயர்ந்துள்ளது. 25,760 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,712 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,187 படுக்கைகள் உள்ள நிலையில் 1,050 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 137 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,686 படுக்கைகள் உள்ள நிலையில் 842 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 844 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்றும் மொத்த பாதிப்பில் 70 சதவீதம் கிராமப்புறங்களிலேயே ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story