ஆத்தூர் அருகே மீனவர் தற்கொலை


ஆத்தூர் அருகே மீனவர் தற்கொலை
x
தினத்தந்தி 25 May 2021 5:45 PM IST (Updated: 25 May 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர்
ஆத்தூர் அடுத்துள்ள புன்னக்காயல் பொன் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த ரிச்சர்ட் மகன் டென்சிங்(வயது 37). மீனவர். இவருக்கு விஜோனோ என்ற மனைவியும், ஒரு ஆண் , ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
கடந்த 20 நாட்களாக முழு ஊரடங்கு காரணமாக கடலில் மீன்பிடிக்க படகுகள் செல்லாத நிலையில் வீட்டிலேயே இருந்த அவர் மது குடிப்பதற்கு அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். கடந்த 23ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி கண்டித்துள்ளார். 
மது குடிக்க...
மீண்டும் 24-ஆம் தேதி காலையில் தனது மனைவியிடம் டென்சிங் குடிக்க பணம் தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை என மனைவி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த முகத்தில் போடும் சேவிங் லோசனை குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு,  காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளனர். இது தொடர்பாக விஜோனா ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை 
புகாரின் அடிப்படையில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, அவரது உடலை  கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story