அதிராம்பட்டினத்தில் பலத்த சூறைக்காற்று

அதிராம்பட்டினத்தில் பலத்த சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் பலத்த சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சூறைக்காற்று
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். யாஸ் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென காற்று வீசதொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்து பலத்த சூறைக்காற்றாக வீசியது.
மின்தடை
இதனால் தென்னை மரங்கள் உள்ளிட்ட அனைத்து மரங்களும் அதிக காற்றின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அசையத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மீண்டும் கஜா புயல் போல புயல் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் உறைந்தனர். காற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இருப்பினும் காற்று பலமாக வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். மாலை 2 மணிக்கு தொடங்கிய காற்று இரவு 8.30 வரை வீசியது. காற்றின் வேகத்தால் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் துறைமுக பகுதிகளுக்கு சென்று தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக வைத்தனர்.
Related Tags :
Next Story