வெடி விபத்தில் தொழிலாளி பலி கல் குவாரி உரிமையாளர் கைது


வெடி விபத்தில் தொழிலாளி பலி கல் குவாரி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 27 May 2021 3:57 AM IST (Updated: 27 May 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

கல் குவாரி உரிமையாளர் கைது

சேலம்:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 42). இவர், கிச்சிப்பாளையம் அருகே சன்னியாசிகுண்டு பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கந்தாஸ்ரமம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு ராசிபுரம் அருகே அத்தனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39), குமார் (34) ஆகிய 2 தொழிலாளர்கள் கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாறையை தகர்க்க குழியில் வைத்திருந்த வெடி திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சுரேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குமார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அனுமதியின்றி வெடி வைத்திருந்ததாகவும், கவனக்குறைவாக இருந்ததற்காகவும் கல் குவாரி உரிமையாளர் அர்ஜுனனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story