அரசு பள்ளிகளில் தனிமைப்படுத்துதல் மையம்


அரசு பள்ளிகளில் தனிமைப்படுத்துதல் மையம்
x
தினத்தந்தி 27 May 2021 5:29 PM IST (Updated: 27 May 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் தனிமைப்படுத்துதல் மையம்

சேவூர்
சேவூர் சுற்றுப்புற கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் சிறிய அறை கொண்ட வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தொடர்ந்து அந்தந்த கிராம பகுதி ஊராட்சி நிர்வாகத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தனிமைப்படுத்துதல் மையங்களை ஏற்படுத்தி உள்ளனர். பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு தகுந்தாற்போல், பெஞ்சுகளை கொண்டு படுக்கையாக அமைக்கப்பட்டு உள்ளது.
மருத்துவர் மற்றும் சுகாதார துறையினர் பரிந்துரையின் அடிப்படையில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவோர், தனிமைப்படுத்தி கொள்ள வாய்ப்பு இல்லாத ஒரே அறை கொண்ட சிறிய வீடுகளில் வசித்து வருபவர்கள் ஊராட்சி நிர்வாகத்தினரை அணுகி பள்ளிக்கூடங்களில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம் என சேவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

---


Next Story