வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி


வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 May 2021 10:41 PM IST (Updated: 27 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 24-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதற்காக வேலூர் மாவட்டத்துக்கு சுமார் 40 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி, வேலூர் தலைமை தபால் நிலையம், ஊரீசு கல்லூரி, கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை, காட்பாடி காந்திநகர் பி.வி.ஆர். சினிமா மகால், பிரியா திருமண மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என்று நேற்று ஒரேநாளில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று முன்தினம் 4,269 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story