ஊரடங்கை மதிக்காத பொதுமக்கள், வாகன ஓட்டிகளால் வேகமாக பரவும் தொற்று


ஊரடங்கை மதிக்காத பொதுமக்கள், வாகன ஓட்டிகளால் வேகமாக பரவும் தொற்று
x
தினத்தந்தி 28 May 2021 12:40 AM IST (Updated: 28 May 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரடங்கை மதிக்காத பொதுமக்கள், வாகன ஓட்டிகளால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது.

தா.பழூர்;

வேகமாக பரவும் தொற்று
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் பொதுமக்கள் வீதிகளில் நடமாடி வருகின்றனர். தா.பழூர் நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேவையின்றிசாலையில் சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தொடர்ந்து காரணமில்லாமல் சாலைகளில் சென்று வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம், கூட்டமாக காத்திருக்கின்றனர். தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களில் பலா் பொறுப்பின்றி திரிகின்றனர். இதனால் கிராமங்களில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது.
கடும் நடவடிக்கை
தா.பழூர் வட்டாரத்தில் பல்வேறு ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நோய்த்தொற்று பரவலின் வேகத்தை குறைக்க முடியவில்லை. எனவே அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்கள் நடமாட்டத்தையும், கனரக வாகனங்களின் போக்குவரத்தையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஊரடங்கை மதித்து வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story