காற்றில் முறிந்த மரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர்

காற்றில் முறிந்த மரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.
ஈரோடு
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றில் மரக்கிளை ஒன்று முறிந்து மின்சார கம்பியில் விழுந்தது. மேலும் பெரிய அளவிலான அந்த கிளை எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு, மரத்தில் ஏறி மின்சார கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினார்கள்.
அதேநேரம் மின்சார வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றிய பச்சை மரத்தையொட்டி காய்ந்து போன ஒரு மரம் எப்போது விழலாம் என்ற நிலையில் உள்ளது. இந்த மரத்தை அகற்றாமல் சென்று விட்டனர். இதுவரை பச்சை மரக்கிளையின் பிடியில் நின்ற காய்ந்த மரம் இனிமேல் வலுவாக காற்று வீசினாலே விழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு காய்ந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story