மாவட்ட செய்திகள்

தடுப்புகளால் தெருக்கள் அடைப்பு + "||" + street ban in stick

தடுப்புகளால் தெருக்கள் அடைப்பு

தடுப்புகளால் தெருக்கள் அடைப்பு
தடுப்புகளால் தெருக்கள் அடைப்பு
சேவூர்
சேவூர் ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 25க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சந்தையப்பாளையம், தேவேந்திர நகர் பகுதிகளில் தலா 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தையப்பாளையம், தேவேந்திர நகர் பகுதிகளில் உள்ள வீதிகளை சேவூர் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு கட்டைகள் அமைத்து அடைத்தனர். இதை தொடர்ந்து சேவூர் ஊராட்சி பகுதிகளில கிரிமி நாசினி தெளித்து, பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையில்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் போன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.இதேபோல் சேவூர் அருகே உள்ள முறியாண்டம்பாளையம் ஊராட்சி காமராஜ் நகரிலும் தொற்று பரவல் காரணமாக நேற்று வீதிகள் அடைக்கப்பட்டன.