3 வாரத்துக்கு பிறகு இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்


3 வாரத்துக்கு பிறகு இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:42 PM IST (Updated: 1 Jun 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

3 வாரத்துக்கு பிறகு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 10-ந்தேதி முதல் பஸ்கள், வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. அதேநேரம் ஒரு சில ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் ரெயிலில் தான் செல்கின்றனர். 

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட ஒருசில ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 3 வாரத்துக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

 இதையடுத்து அந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு 8 மணிக்கு வந்தது. ஆனால் ரெயிலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்தனர். 

மேலும் சாதாரண நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 200-க்கும் மேற்பட்டோர் செல்வார்கள். கொரோனா அச்சம் காரணமாக நேற்றைய 20-க்கும் குறைவான பயணிகளே திண்டுக்கல்லில் இருந்து அந்த ரெயிலில் ஏறினர். 

இதையடுத்து அந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story