கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 160 பேருக்கு கொரோனா பரிசோதனை


கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 160 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 1 Jun 2021 9:43 PM IST (Updated: 1 Jun 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 160 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டி நகரில் முழு ஊரடங்கு நேரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் காரணமின்றி ஊர் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராம் உத்தரவிட்டார். அதன்பேரில் கோவில்பட்டி- கடலையூர் ரோடு சந்திப்பில் டாக்டர் மனோஜ், நகரசபை சுகாதார ஆய்வாளர் சுரேஷ், கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். சோதனையின் போது எவ்வித காரணமும் இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றிய 160 பேருக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை நடத்தி, அறிவுரை வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story