வாலாங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

வாலாங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
கோவை
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாங்குளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைகளால் தற்போது மூன்று பிரிவுகளாக குளம் காணப்படுகிறது. உக்கடம் பெரியகுளத்தில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வாலாங்குளத்துக்கு வந்தடைகிறது.
முறையான பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தால் வாலாங்குளத்தில் தற்போது ஆகாயத்தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றன. அதேபோல், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கழிவுநீர் வாலாங்குளத்தில் கலப்பதால் குளத்தின் நீர்நிலை மாசடைந்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரி கழிவு நீரும் குளத்தில் கலக்கிறது.
இதன் காரணமாக, சுங்கம் செல்லும் வழியில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்பகுதியை ஒட்டிய நீர்நிலைகளில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நீர்நிலை மாசடைந்து, அதனால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Related Tags :
Next Story