மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 141 பேர் கைது

மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 141 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், சாராயம் கடத்தல், விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் கடந்த 28-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 5 கார்கள், 14 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதோடு 7,864 லிட்டர் சாராயம், 6,810 லிட்டர் சாராய ஊரல், 5,074 மதுபாட்டில்கள், 455 கிலோ வெல்லம், 62 லிட்டர் கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story