மாவட்ட செய்திகள்

திருவாரூரில், ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி + "||" + In Thiruvarur, the task of issuing house-to-house tokens for the purchase of ration items for the month of June

திருவாரூரில், ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி

திருவாரூரில், ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி
திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
திருவாரூர்,

கொரோனா நோய் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜூன் மாதத்திற்கு பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் சமூக இடைவெளியுடன் பொருட்கள் பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 996 குடும்ப அட்டைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 728 ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாத பொருட்கள் வழங்குவதற்கான பணி தொடங்கப்பட உள்ளது.


டோக்கன் வழங்கும் பணி

இதனையொட்டி நேற்று திருவாரூரில் ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி மேற்கொண்டனர். இந்த பணி சில நாட்களில் முடிக்கப்பட்டு வருகிற 5-ந்தேதிக்கு மேல் ஜூன் மாத ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.கே. பேட்டை அருகே வெடி பொருட்கள் செயலிழக்க வைப்பு
ஆர்.கே.பேட்டை அருகே வெடி பொருட்கள் செயலிழக்க வைக்கப்பட்டன.
2. ரேஷன் கார்டில் குறியீட்டை மாற்றம் செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வடகாட்டில் ரேஷன் கார்டில் குறியீட்டை மாற்றம் செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் 31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்
நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் வரும் 31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு முறை அமலுக்கு வந்தது
சென்னை மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு முறை அமலுக்கு வந்தது. ஒரு சில கடைகளில் பழுதான எந்திரங்களை மாற்றி சேவையை விரைவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5. சேமிப்பு கிடங்குகளில் இருந்து 14 வகை நிவாரண பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி
தமிழகத்தில் முழு ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி வழங்கும் விதமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது.