தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது ரங்கசாமி தகவல்


தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது ரங்கசாமி தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2021 6:02 PM IST (Updated: 4 Jun 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

தேவையான அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாட்ஸ்-அப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே தங்களை பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

எனவே மருத்துவர்கள் கூறும் ஆலோசனைப்படி ஒவ்வொருவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவித அச்சமும் இல்லை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேவையான அளவு தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளது. ஆதலால் மக்கள் அனைவரும் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story