பொள்ளாச்சி போத்தனூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்


பொள்ளாச்சி போத்தனூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:50 PM IST (Updated: 4 Jun 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய பொள்ளாச்சி- போத்தனூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பொள்ளாச்சி

தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய பொள்ளாச்சி- போத்தனூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

உறுதி தன்மை குறித்து ஆய்வு

திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

 தற்போது கொரோனா காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்ட உள்ளன. அதுபோன்று மின் மயமாக்கல் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பாலக்காடு-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-போத்தனூர் மற்றும் கோவை-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் அதிவேக சோதனை ஓட்டம்  நடைபெற்றது. 

மேலும் ரெயில் நிலை பகுதியில் தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

அதிவேக சோதனை ஓட்டம்

பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் கோவை-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

பாலக்காட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 9 மணிக்கு ரெயில் வந்தது. அப்போது ரெயிலின் வேகம் பதிவு செய்யப்பட்டது.

 தற்போது ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்கும் பகுதியில் 15 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.

இதை 30 கிலோ மீட்டர் வேகமாக அதிகரிக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் கோவை- மேட்டுப்பாளையம் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இதை 125 கிலோ மீட்டராக அதிகரிப்பது குறித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

அப்போது சில இடங்களில் தண்டவாளத்தில் லேசான அதிர்வுகள் இருந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story