கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரம் பேருக்கு உதவி

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரத்து 27 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரத்து 27 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை
இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பாக 1800 4259 456, 93454 67903, 04575-246233 மற்றும் 1077 என்ற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் பேருக்கு...
இதில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கை வசதி கோரி 97 அழைப்புகளும், படுக்கை வசதி மட்டும் கோரி 64 அழைப்புகளும், வீட்டுத்தனிமையின் போது ஆலோசனை கோரி 42 அழைப்புகளும் வரப்பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஏற்கனவே கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவர் ஆலோசனையுடன் வீட்டுத்தனிமையில் இருந்த 114 நபர்களை கண்டறிந்து மீள மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும் இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கிய நாள் முதல் 759 அழைப்புகளும், இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து 15 ஆயிரத்து 27 பேரிடம் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் கொேரானாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் உளவியல் ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story