ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய அக்காள்-தம்பி

கொடைக்கானல் ஆர்.டி.ஓ.விடம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை அக்காள்-தம்பி வழங்கினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். அவருடைய மகள் டேனிட்டா. இவர், கொடைக்கானலில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவரது தம்பி ரோகித். இவர், 6-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் 2 பேரும், தங்களது பெற்றோர் கொடுக்கிற பணத்தை சேமித்து வந்தனர்.
இந்தநிலையில் அந்த பணத்தை, முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். அதன்படி தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் வழங்கினர்.
நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., அக்காள்-தம்பியை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதேபோல் நிவாரண உதவி வழங்கிய அவர்களை பலரும் பாராட்டினர்.
-------
Related Tags :
Next Story