மெக்கானிக் கடையில் புகுந்த கொடிய விஷப்பாம்பு பிடிபட்டது

ஆலங்குளத்தில் மெக்கானிக் கடையில் புகுந்த கொடிய விஷப்பாம்பு பிடிபட்டது.
ஆலங்குளம், ஜூன்:
ஆலங்குளம்-தென்காசி மெயின் ரோட்டில் எஸ்.எஸ்.என் திருமண மண்டபம் அருகில் ராமர் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். ஊரடங்கு தளர்வுக்கு பின் கடையை நேற்று திறந்தபோது கடைக்குள் கொடிய விஷமுள்ள பாம்பு இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலைவேல் தலைமையில் விஸ்வநாதன், திருமலை கணேசன், ரமேஷ், ஜஸ்டின் பாக்யராஜ், ஆனந்தகுமார், மற்றும் செல்வராஜா ஆகியோர் வந்தனர். கடைக்குள் இருந்து விஷ பாம்பை உயிருடன் மீட்டு ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதியில் விட்டனர்.
இதேபோல் ஆலங்குளம் அருகே ருக்மணியம்மாள்புரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடைய கிணற்றில் பசு மாடு விழுந்து கிடந்ததை அந்த வழியே சென்ற விஜயன் என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சிவகுமார், திருமலைக்குமார் தனசிங், கார்த்திக் ஆகியோர் சென்று கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story