நகராட்சி ஊழியர்களுக்கு 5 ஆயிரம் முககவசம்; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்


நகராட்சி ஊழியர்களுக்கு 5 ஆயிரம் முககவசம்; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jun 2021 1:47 AM IST (Updated: 9 Jun 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் நகராட்சி ஊழியர்களுக்கு 5 ஆயிரம் முககவசங்களை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்.

செங்கோட்டை, ஜூன்:
செங்கோட்டை நகராட்சி பணியாளா்களுக்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி குட்டியப்பா, நகராட்சி ஆணையாளர் நித்தியாவிடம் 5 ஆயிரம் முககவசங்களை வழங்கினார். மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகளை சீரான முறையில் நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். அப்போது, நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கடேஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளா் முத்துமாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அதன் பின்னர் ஊரடங்கு காலங்களில் இரவு நேரங்களில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. இதனால் அம்மா உணவகத்தில் இரவு நேரம் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஒரு வார காலத்திற்கு நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகத்தில் இலவசமாக இரவு நேரங்களில் உணவு வழங்க தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.9 ஆயிரத்தை நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம், கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.கே.முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story