ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் வசூலித்து விடுவிக்கலாம்


ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் வசூலித்து விடுவிக்கலாம்
x
தினத்தந்தி 9 Jun 2021 1:54 AM IST (Updated: 9 Jun 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் வசூலித்து விடுவிக்கலாம் என அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் வசூலித்து விடுவிக்கலாம் என அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வாகனங்கள் பறிமுதல்

கர்நாடகம் முழுவதும் ஊரடங்கின் போது அரசின் உத்தரவை மீறி தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்களிடமிருந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். 

பெங்களூருவில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல் மாநிலம் முழுவதும் தேவையில்லாமல் சுற்றிய நபர்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீஸ் நிலையங்களில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க அனுமதி கோரி கர்நாடக அரசு அரசு சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி ஏ.எஸ் ஓகா முன்னிலையில் நடைபெற்றது.

விடுவிக்க அனுமதி

அப்போது ஊரடங்கின் போது பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசுக்கு அனுமதி அளித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் வாகனங்களை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் யாரும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அபராத தொகையை செலுத்திவிட்டு தங்களது வாகனங்களை உரிமையாளர்கள் மீட்டு செல்லலாம் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இது பொருந்தும் என்றும் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவிட்டுள்ளார் ஐகோர்ட்டு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.500-ம், மற்ற வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story