அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:44 PM IST (Updated: 11 Jun 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு மாநில செயலாளர் நாகலட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, 

கொரோனா தொற்றால் இறந்த பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story