மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் + "||" + Petrol, Condemns diesel price high Congress Party Demonstration

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பூர், 

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.வுமான அசன் மவுலானா, தென் சென்னை இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலந்தூர் மண்டலம் சார்பில் ஆதம்பாக்கம் சுரேந்தர் நகரில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையிலும், திருவொற்றியூர் காங்கிரஸ் கட்சி 2-வது சர்க்கிள் சார்பில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பெட்ரோல் நிலையம் அருகே தலைவர் கே.எஸ்.அரவிந்த் ஆறுமுகம் தலைமையிலும், மணலி 6-வது சர்க்கிள் சார்பில் மணலி காமராஜர் சாலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தி தலைமையிலும், தென் சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மன்சூர் சுபான் தலைமையில் அம்பத்தூர் வாவின் பகுதியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக தி.மு.க. நிா்வாகி உள்பட 5 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
2. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.