மாவட்ட செய்திகள்

வெள்ளகோவிலில் தெருநாய்கள் தொல்லை + "||" + vellakkovil dogs

வெள்ளகோவிலில் தெருநாய்கள் தொல்லை

வெள்ளகோவிலில் தெருநாய்கள் தொல்லை
வெள்ளகோவிலில் தெருநாய்கள் தொல்லை
வெள்ளகோவில், 
வெள்ளகோவில் பகுதியில் கச்சேரிவலசு, சொரியங்கிணத்துபாளையம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை உள்ளது. இவைகள் செம்மறி ஆடுகளை கடித்துள்ளன. இதனால் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் செத்தன. தெரு நாய்கள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கோழிக்கழிவுகளை சாப்பிட்டுவிட்டு குடியிருப்பு பகுதிகளில் வெறிப்பிடித்து சுற்றித்திரிகின்றன. 
இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படு்த்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.