தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிதம்பர நகர் மெயின் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல், ஒன்றிய செயலாளர் சங்கரன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் முத்து, மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்ணன், தசலிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story