7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப ்பட்டு உள்ளனர்.
விருதுநகர்,
7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப ்பட்டு உள்ளனர்.
உத்தரவு
மதுரை போலீஸ் சரகத்தில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இதற்கான உத்தரவை மதுரைச்சரக டி.ஐ.ஜி.காமினி பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- மதுரை கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெம்ப கோட்டை இன்ஸ்பெக்டர் பாலாஜி விருதுநகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். மதுரை எஸ்.பி.கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வெம்ப கோட்டை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இருக்கன்குடி
இருக்கன்குடி உமாதேவி மதுரை சமயநல்லூருக்கு மாற்றப் பட்டு உள்ளார். சாத்தூரில் பணியாற்றும் மாயராஜலட்சுமி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப் பட்டுள்ளார்.
மதுரை மேலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மயில் இருக்கன்குடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் செல்லப்பாண்டி சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story