கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் ஒன்றியம் காவதுகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், பொன்பேத்தி ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தர பாண்டியன், ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவகுமார், ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி மற்றும் பொன்பேத்தி அரசு மருத்துவமனை மருத்துவர் துரை ராமச்சந்திரன், மருத்துவ ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முகாம் ஏற்பாடுகளை காவதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா சோனமுத்து செய்திருந்தார். இதில் 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதேபோல திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Tags :
Next Story