ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு; விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கடந்த 2017-ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், கருக்காகுறிச்சி, கோட்டைகாடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல்வேறு கட்டங்களாக 200 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினரும் ஆதரவு தரிவித்ததால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கோட்டைக்காடு அருகே கருவட தெரு உள்பட இந்தியா முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 10-ந் தேதி ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது இப்பகுதி விவசாயிகளுக்கு தெரிய வரவே இத்திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருவட தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்ட குழாய் மீது ஏறி நின்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story