மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மேட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மேட்டூர்:
மேட்டூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விக்னேஸ்வரமூர்த்தி (வயது 28). இவர், மேட்டூர் சேலம் கேம்பில் உள்ள வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்த போது சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரமூர்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story