மணல் கடத்திய லாரி பறிமுதல்


மணல் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:56 PM IST (Updated: 14 Jun 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்களம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எம்.சூரக்குடி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.
போலீசாரை பார்த்ததும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்த போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story