தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த தொழிலாளி பலி. யாரோ வருவதாக நினைத்து ஓடியபோது கிணற்றில் விழுந்தார்


தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த தொழிலாளி பலி. யாரோ வருவதாக நினைத்து ஓடியபோது கிணற்றில் விழுந்தார்
x
தினத்தந்தி 16 Jun 2021 9:35 PM IST (Updated: 16 Jun 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த தொழிலாளி, யாரோ வருவதாக நினைத்து ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வாணியம்பாடி

கள்ளத்தொடர்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரம் சவுக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 27). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கிருஷ்ணமூர்த்தியின் மனைவி, அவருடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கிருஷ்ணமூர்த்தியின் தம்பி ஹரி என்பவருக்கு திருமணமாகி  மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்திக்கு, அவருடைய தம்பி மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக கள்ளதொடர்பு இருந்ததாகவும், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 கிணற்றில் விழுந்து பலி

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய வாணியம்பாடியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கிருஷ்ணமூர்த்தியும், அவரது தம்பி மனைவியும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த நபர் டார்ச் அடிப்பதை பார்த்ததும், கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓடியிருக்கிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் தாய் வள்ளியம்மாள் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடைய மகன் கிருஷ்ணமூர்த்திக்கு அழிஞ்சிகுளம் பகுதியில் உள்ள தம்பி வீட்டில் ஏதோ பிரச்சினை என செல்போனில் அழைப்பு வந்ததை அறிந்து, அதனை பற்றி பேச சென்றதாகவும், சென்ற 30 நிமிடத்தில் கிணற்றில் தவறி விழுந்து விட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது தன்னுடைய மகனின் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும், யாரோ அடித்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story