கொரோனா தொற்று 80-க்கும் கீழே குறைந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 80-க்கும் கீழே குறைந்தது.
புதுக்கோட்டை, ஜூன்.17-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 80-க்கும் கீழே குறைந்தது. ஒரே நாளில் 200 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.
74 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று பாதிப்பு 100-க்கும் கீழே குறைந்தது. இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 80-க்கும் கீழே குறைந்தது.
நேற்று மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 200 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 411 ஆக உயர்ந்தது.
மேலும் 4 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 1,175 ஆக உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் மேலும் 4 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும், கொரோனாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story