உடுமலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்னேற்பாடாக முதல்கட்ட ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


உடுமலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்னேற்பாடாக முதல்கட்ட ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
x
தினத்தந்தி 17 Jun 2021 10:22 PM IST (Updated: 17 Jun 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்னேற்பாடாக முதல்கட்ட ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

உடுமலை
உடுமலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்னேற்பாடாக முதல்கட்ட ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகைக்கடைகள், காய்கறிகடைகள் உள்ளிட்ட சில வகை கடைகளை திறப்பதற்கான அனுமதி உள்ளிட்ட சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த முழு ஊரடங்கு 21-ம்தேதி காலை 6 மணி வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகளின் படி கடந்த 14-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறையாமலிருந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
வெளிமாவட்டங்களுக்கு சென்று
அதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவைச்சேர்ந்த மதுப்பிரியர்கள் மாவட்ட எல்லை பகுதியான திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சாமிநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் கொழுமம் சோதனைச்சாவடியை அடுத்துள்ள பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை ஆகிய இடங்களுக்கு சென்று மது பாட்டில்களை வாங்கிவந்தனர். 
இதேபோன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்களும் இந்த பகுதிகளுக்குச்சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். இதே நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட மற்ற மாவட்டங்களின் எல்லை பகுதிகளிலும் இருந்தது. அதனால் அந்த மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
உடுமலையில் ஆயத்த பணிகள்
இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி முதல், மற்ற மாவட்டங்களிலும் டாஸ்மாக்  கடைகளை திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு முன்னேற்பாடாக முதல்கட்ட ஆயத்தபணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை தாலுகாவில் நகராட்சி பகுதியில் ராஜேந்திரா சாலை, அனுஷம் நகர், தாராபுரம் சாலை, சரவணாவீதி உள்ளிட்ட இடங்களில் 8 டாஸ்மாக் கடைகளும், ஊராட்சி பகுதியில் எரிசனம்பட்டி, கரட்டுமடம், குறிச்சிக்கோட்டை, ஒன்பதாறு செக்போஸ்ட், எலையமுத்தூர், மொடக்குப்பட்டி உள்பட 17 இடங்களிலும், மடத்துக்குளம் தாலுகாவில் கணியூர், மடத்துக்குளம், துங்காவி, குமரலிங்கம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 இடங்களிலும் என உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் மொத்தம் 31 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
 சவுக்கு மரங்களால் தடுப்புகள் 
இந்த கடைகள் திறக்கப்படும் போது கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளுக்கு முன்பு மதுப்பிரியர்கள் வரிசையாக நின்று செல்வதற்கு வசதியாக  சவுக்கு மரங்களால்  தடுப்புகள் அமைக்கப்பட்டும், சமூக இடைவெளி விட்டு நிற்பதற்காக வட்டங்கள் வரையப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்னேற்பாடாக, பாதுகாப்புக்கான சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட முதல்கட்ட ஆயத்தப்பணிகளை டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

Next Story