கடலூர் முதுநகரில் போலீஸ்காரர் வீட்டில் பணம் திருட்டு
கடலூர் முதுநகரில் போலீஸ்காரர் வீட்டில் பணத்தை திருடிய மர்மநபா்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் சுனாமி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காற்றுக்காக தனது வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தையும் காணவில்லை.
வலைவீச்சு
கதவு திறந்து கிடந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ்காரர் வீட்டில் பணம் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story