சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்- இன்று நடக்கும் இடங்கள் விவரம்

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடக்கும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று 48 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3,427 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை வீரபாண்டியார் நகர், அந்தோணிபுரம், போடிநாயக்கன்பட்டி, சூரமங்கலம் மெயின்ரோடு, மூலபட்டன் வட்டம், ஜெயாநகர் ஹவுசிங்போர்டு, பழனியப்பா நகர், சாமிலிங்கம் மூர்த்தி தெரு, ஆட்டோ காலனி, அசித் தெரு, வள்ளி நகர், விளையாட்டு மாரியம்மன் கோவில் தெரு, இந்திரா நகர், ராமு தெரு, வடக்கு முனியப்பன் கோவில் தெரு, தாகூர் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதேபோல், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை லட்சுமண் நகர், சோளம்பள்ளம், ஆண்டிப்பட்டி காலனி, பெரியகிணறு தெரு, சாரதா காலேஜ் ரோடு, மகாலட்சுமி நகர், மரவனேரி, மாரியம்மன் கோவில் தெரு, பெண்ணாடம் ராமசாமி தெரு, பேச்சியம்மன் கோவில் தெரு, குருநாதன் காடு, ராம சுந்தரம் தெரு, சாமுண்டி தெரு, நடுத்தெரு, நேதாஜி தெரு, சின்ன பாய்ச்சல் காடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் நகர், அய்யர் தெரு, நரசிம்மன் ரோடு, சரஸ்வதி தெரு, வாத்தியார் தோட்டம், தோப்புக்காடு, ஷேக் காசீம் தெரு, புதுத்தெரு, எருமாபாளையம் மெயின் ரோடு, அப்பர் தெரு, அருண ஸ்ரீ தெரு, பச்சியம்மன் கோவில் தெரு, தொல்காப்பியர் தெரு, முனிசிபல் தோட்டம், சங்ககிரி மெயின் ரோடு, செல்வமுத்து மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதேபோல், சித்தா மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெரியபுதூர் பள்ளியிலும் நடைபெறுகிறது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story