பயிர் மேலாண்மை பயிற்சி


பயிர் மேலாண்மை பயிற்சி
x
தினத்தந்தி 18 Jun 2021 10:41 PM IST (Updated: 18 Jun 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள என்.பெத்தனேந்தல் கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராகவன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். வேளாண்மை துணை இயக்குனர் கண்ணையா பருத்தியில் உரம் நிர்வாகம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். துணை இயக்குனர் பாஸ்கரமணியன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து பேசினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் பிரமிளாதேவி, துணை வேளாண்மை அலுவலர் சுருளி வேலு, உதவி வேளாண்மை அலுவலர் சக்திமோகன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலா தேவி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story