நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி


நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி
x
தினத்தந்தி 19 Jun 2021 9:49 PM IST (Updated: 19 Jun 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

செந்துறை:
நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. 
இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி, ஒன்றிய ஆணையாளர்கள் அண்ணாதுரை, உதயகுமார், தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். 
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், நத்தம் பகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தடுப்பூசி மட்டுமே நம்மை கொரோனாவில் இருந்து காப்பாற்றும். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ரத்தினக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் (பொறுப்பாளர்) பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், பேரூர் செயலாளர் முத்துகுமாரசாமி, குடகிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி சிவஞானம் மற்றும் செந்துறை பகுதி தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செந்துறை கூட்டுறவு சங்க செயலாளர் அக்பர் நன்றி கூறினார்.

Next Story